Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தேசிய குடற்புழு நீக்க நாள்….. “பள்ளி மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கிய ஆட்சியர்”….!!!!!

பள்ளி மாணவர்களுக்கு குடற்பழு நீக்க மாத்திரைகளை ஆட்சியர் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் இருக்கும் தென்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் பணிகள் துணை இயக்குனர், வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

Categories

Tech |