தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் 12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருபத்தி ஏழு மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதியது. இதில் தமிழ்நாடு அணி கர்நாடக அணியை 30 கோல் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாடு அணி வீரர்கள் ஜோஸ்வா, சுந்தரபாண்டி மற்றும் சரவணகுமார் ஆகியோர் அரை இறுதி ஆட்டத்தில் தலா ஒரு கோல் அடித்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அணி அரை இறுதி ஆட்டத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.