சிய சீனியர் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 27 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டியின் முடிவில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இணைந்த நிலையில் டை பிரேக்கர் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இரண்டாவது இடத்தை தமிழ்நாடு அணி பெற்றது. தமிழ்நாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாடு சீனியர் ஹாக்கி அணிக்கு மாநில விளையாட்டு துறை மந்திரி மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.