பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோதியை காரணம் என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் திரு. சீராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கிய சீராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றிருந்தாலும் 5.6 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது குறித்து பேசிய சீராக் பாஸ்வான் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியே காரணம் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மீதான தங்கள் நம்பிக்கையை பீகார் மக்கள் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக மீது மக்கள் ஆர்வம் கொண்டிருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் திரு. பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றியை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.