மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் 17-வது தேசிய இளையோர் தடகளப் போட்டி இன்று முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்-வீராங்கனைகளின் பட்டியலை தமிழக தடகள சங்க செயலாளர் லதா வெளியிட்டுள்ளார்.
அதன்படி 23 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 53 பேர் பங்கேற்கின்றனர். இந்த அணியின் விவரம் பின்வருமாறு, டி. பரணிதரன், எஸ். பரணிதரன், கீர்த்தி வாசன், கனிஷ்கர், கவின் ராஜா, முகேஷ், விஷ்ணுவரதன், கேஸ்ட்ரோ ராஜ், அஜய், பாலா ஜீவா, சஞ்சய் நிசன், ஜெரோம், விஷ்ணு ஸ்ரீ, திவ்யதர்ஷன ஜெயச்சந்திரன், ஹரிஹரன், வால்டர் கண்டுலனா, கவரி சங்கர், சகாய அண்டோ, மித்ரேஷ், கென்ரிச் கிஷோர், மனோஜ் குமார் மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் ஆண்கள் பிரிவில் பங்கேற்கின்றனர்.
இதனையடுத்து பெண்கள் பிரிவில் டோனி, வாலன்சியா, ரதீஷ்கா, கயினிஷ்கா, மகர ஜோதி, ஷெரின் ஜோன்னா, சுவாதி, காவியா, மதுமிதா, ரின்சி ரோஸ், ரூபஸ்ரீ, அனுஷ் ராஜகுமாரி, தரண்யா, லக்சன்யா, திவ்யஸ்ரீ, பவீனா, சுபஸ்ரீ, லின்சி, நமீரா பாத்திமா, அபர்ணா, ஜெய விந்தியா, ஹர்ஷிதா, பிரதிக்ஷா யமுனா, சைனி கிளாஷியா, அகஞ்சா கெர்கட்டா, கீர்த்தி, கனிஷ்டா தீனா, மாரிச்செல்வி, பிரதீகா, ஸ்ரீவித்யா மற்றும் ருதிகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.