ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினேன். அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக கட்சியினர், கூட்டணிக்கு தேசிய தலைமை தான் அறிவிக்கும் என்று தெரிவித்தது குறித்த கேள்விக்கு, தேசிய தலைவர்தான் அன்னைக்கு சொல்லிட்டு போய்ட்டாரு.
எங்களை பொறுத்தவரை பாஜக எங்களின் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகித்த கட்சிகள் எல்லாம் இன்று வரை எங்கள் கூட்டணியில் தான் இருக்கின்றது.
எய்ம்ஸ் மருத்துவ மணிக்கு ஏற்கனவே முழு நிலம் கொடுத்து விட்டோம். முழு டீடைல் வீட்டில் வைத்து வைத்து வந்துவிட்டேன். தமிழக அரசு சார்பில் முழுதாக நிலம் கொடுத்து விட்டோம். மத்திய அரசாங்கம் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என முதல்வர் விளக்கம் அளித்தார். மின்சாரம் தயார் மயமாக்கப்படும் நிலை தமிழகத்தில் இல்லை என முதல்வர் தெரிவித்தார்.