Categories
உலக செய்திகள்

தேசிய தின கொண்டாட்டம்…. வண்ண விளக்குகளால்…. ஒளிரூட்டப்பட்ட ஈபிள் கோபுரம்….!!

ஈவில் கோபுரம் வண்ண விளக்குகளால் மற்றும் வானவேடிக்கையால் ஒளிரூட்டப்பட்டது. 

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் வண்ண விளக்குகளால் ஒளிரப்பட்டுள்ளது. இங்கே தேசிய தின கொண்டாட்டத்தை நிறைவு செய்யும் வகையில் ஈபில் கோபுரத்தை சுற்றி கண்கவர் வானவேடிக்கையும் நிகழ்த்தப்பட்டது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் உக்ரைனுக்கு ஆதரவு  தெரிவிக்கும் வகையில் உக்ரைன் நாட்டின் தேசியக்கொடி நிறங்களில் ஈபில் கோபுரம் ஒளிர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஈபில் கோபுரத்தின் பின்னணியில் ஸ்டெஃபானியா பாடலின் மூலம் 2022 ஆம் ஆண்டு யூரோ விஷன் பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற உக்ரைன் நாட்டை சேர்ந்த கலுஷ் இசைக்குழுவினரின் இசையும் ஒலிக்கப்பட்டது. இந்த காட்சியை ஏராளமான  மக்கள் கண்டும், கேட்டும் மகிழ்ந்தனர்.

Categories

Tech |