Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வு…. வெற்றி பெற்ற மாணவிகள்…. ஆசிரியர்கள் பாராட்டு…!!!

மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வானது மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் எழுதியுள்ளனர்.

இந்த தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், சிவ பிரசன்னா, நிஷாந்தினி, கோகிலவாணி, கயல்விழி, கமலி, ஜோதி ஸ்ரீ, பவதாரணி உள்ளிட்ட 7 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |