தமிழ்நாடு அரசின் பொது நூலக துறையின் நீலகிரி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில், 55 ஆவது தேசிய நூலக வார விழா ஊட்டியில் உள்ள மைய நூலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு நூலக வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி தலைமை தாங்க, நூலகர் ரவி முன்னிலை வகித்துள்ளார். இதில் ஊட்டி பிரிக்ஸ் பள்ளி உட்பட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு புத்தக கண்காட்சி மற்றும் நீலகிரி மண்ணும் மக்களும் எனும் தலைப்பில் ஆவணப்பட கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பது இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. இதனையடுத்து வருகிற 21-ஆம் தேதி வரை கவியரங்கம், நாடகம், வாசிப்பை நேசிப்போம், கருத்தரங்கம், பரிசளிப்பு, போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அதேபோல் கோத்தகிரி கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா நேற்று தொடங்கியுள்ளது. இதற்கு நூலக வாசகர் வட்ட தலைவர் அளியூர் போஜன் தலைமை தாங்கியுள்ளார். இதில் இந்திய நிலக்கரி நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜேஷ் சந்தர் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். முடிவில் நூலகர் முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.