நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பேரல் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் ராசிபுரம் காவல் நிலைய காவலர் தேவராஜன் ஆகியோர் வந்தனர்.
அப்போது விசாரணை செய்து கொண்டிருந்த போது நாமக்கலில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த சுற்றுலா வேன் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உயிரிழந்த கால சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் தேவராஜன் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.