தேசிய நெடுஞ்சாலை பணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழக அரசு வழங்கும் என்று முதல்வர் முக ஸ்டாலின் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் “தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரிவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கான நிலம் மதிப்பீட்டை அங்கீகரிக்கும் முறையை முறைப்படுத்த வேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Categories