தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குனராக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சீதாராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது இவர் தேசிய பங்கு சந்தை விவரங்களை ஏஜெண்டுகளுக்கு முன்கூட்டியே கசிய விட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது. அதுமட்டுமில்லாமல் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமத்துடன் பிறர் சலுகைகள் வழங்கியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆனந்த் சுப்பிரமணியன், சித்ரா ராமகிருஷ்ணன் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து ஜாமின் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.