Categories
தேசிய செய்திகள்

தேசிய பாடத்திட்டம்…. நீங்களும் கருத்து தெரிவிக்கலாம்…. மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு….!!!

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப புதிய இந்தியாவுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள், கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் உட்பட மொத்தம் 23 மொழிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

கருத்துக் கேட்பில் பங்கேற்க விரும்புவோர் https://ncfsurvey.ncert.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்யலாம் என்று மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |