அரியலூர் மாவட்டத்தில் உள்ள தினக்குடி கிராமத்தில் ராமு-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8- ஆம் வகுப்பு படிக்கும் லக்ஷனாதேவி என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பதோடு, விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்த சிறுமி உறை வாள் சண்டை கலையையும் கற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கும்பகோணத்தில் மாநில அளவில் நடைபெற்ற பெடரேஷன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற லக்ஷனாதேவி தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகிற 30-ஆம் தேதி தேசிய அளவிலான பெடரேஷன் போட்டி ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ளது. இதனால் வருகிற 27-ஆம் தேதி சென்னையில் இருந்து சிறுமி ரயில் மூலமாக செல்ல திட்டமிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த லக்ஷனாதேவியின் பயண செலவுக்கு அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.