தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மருளுத்து கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு உறுப்பினர் கலாராணி, ஆள்கடத்தல் பிரிவு காவல்துறை ஆய்வாளர் நிர்மலா, உதவி ஆய்வாளர் வகுளாதேவி, அழகு ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் சுதாராணி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அலுவலர் மீனாட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.