தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று மாநில அரசின் 2002-23 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட உள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 13-18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை திருமணத்தை தடுத்தல் என்ற ஏதாவது ஒரு வகையில் சிறப்பான தனித்துவமான சாதனையை செய்திருக்க வேண்டும்.
இதனையடுத்து பெண்களுக்கு எதிரான சமூக நல ஆணையங்கள், மூடநம்பிக்கைகள் குறித்து கட்டுரைகள் மூலமாகவோ, ஓவியங்கள், கவிதைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட சாதனைகளை புரிந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த13-18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயர் மற்றும் கருத்துருவினை வருகிற 30-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், தர்மபுரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04342-233088 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.