Categories
தேசிய செய்திகள்

தேசிய பென்சன் திட்டம்.. உங்களுக்கே தெரியாத முக்கிய தகவல்கள்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!!

தேசிய பென்ஷன் திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் சீனியர் சிட்டிசன்களுக்கான சிறந்த திட்டம் தேசிய பென்ஷன் திட்டம். மூத்த குடிமகன்களுக்கு இந்தத் திட்டம் பல நன்மைகளை வழங்குவதோடு வரி சலுகைகளையும் தருகின்றது. தேசிய பென்ஷன் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்களை பற்றி பார்க்கலாம்.

குறைந்த விலை:

தேசிய பென்ஷன் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் டெபாசிட் செய்தால் மட்டும் போதும். உலகிலேயே மிகக் குறைந்த விலையிலான பென்ஷன் திட்டங்களில் தேசிய பென்ஷன் திட்டம் ஒன்று.

வருமானம்:

கடந்த சில ஆண்டுகளாக தேசிய பென்ஷன் திட்டம் நல்ல வருமானம் கொடுத்து வருகிறது. அண்மை ஆண்டுகளில் தேசிய பென்சன் திட்டம் 14.50% முதல் 15.80% வரை வருமானம் கொடுத்துள்ளது. ஆனால், அரசு பத்திரங்கள் கார்ப்பரேட் டெட் நிதிகள் கூட 11.90% வரைதான் வருமானம் கொடுத்துள்ளன.

வரி சலுகை:

இந்த திட்டத்தில் வரி சலுகைகள் தான் சிறப்பான அம்சம். தேசிய பென்ஷன் திட்டத்தின் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சி கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி சலுகைகள் உண்டு. மேலும் பிரிவு CCD(1B) கீழ் கூடுதலாக 50,000 ரூபாய் வரை வரிச் சலுகை உண்டு.

Categories

Tech |