Categories
தேசிய செய்திகள்

தேசிய பென்சன் திட்டம் : பென்சன் ரூல்ஸ் மாற்றம்….. புதிய விதிகள் என்ன சொல்கிறது?…. வாங்க பாக்கலாம்…..!!!!

தேசிய பென்சன் திட்டம் தொடர்பான சில விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.

தேசிய பென்ஷன் திட்டம் முதலில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உட்பட அனைவருமே தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக. தனியார் துறை ஊழியர்கள் மத்தியிலும் தேசிய பென்ஷன் திட்டம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்த திட்டத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய பென்ஷன் தொடர்பான சில விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றியுள்ளது.

அதன்படி தேசிய பென்ஷன் திட்டம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் அந்த திட்டத்தில் இருக்கும் ரிஸ்கை பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும். ஒரு பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு அதில் எவ்வளவு ரிஸ்க் உள்ளது என்பதை முதலீட்டார்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஜூலை 15ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகின்றது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை முதலீடு செய்யும் போது அந்தத் திட்டத்தில் ரிஸ்க் எவ்வளவு என்பதை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோல தேசிய பென்ஷன் திட்டத்திலும் குறிப்பிட வேண்டும் என்று விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்காணும் ஆறு வகை ரிஸ்க் அளவுகள் தேசிய பென்ஷன் சார்ந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

குறைவான ரிஸ்க் (Low risk)

குறைவான – நடுத்தர ரிஸ்க் (Low to Moderate risk)

நடுத்தர ரிஸ்க் (Moderate risk)

நடுத்தர – அதிக ரிஸ்க் (Moderately High risk)

அதிக ரிஸ்க் (High risk)

மிக அதிக ரிஸ்க் (Very high risk)

Categories

Tech |