Categories
தேசிய செய்திகள்

தேசிய பென்சன் விதிமுறைகள் மாற்றம்…. வெளியான புதிய ரூல்ஸ் இதோ….!!!!

National Pension System (NPS) எனப்படும் தேசிய பென்சன் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம்  முதலில் அரசு ஊழியர்களுக்காக  அறிமுகப்படுத்தப்பட்டு , பின் தனியார் துறை ஊழியர்களும் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய பென்சன் திட்டத்தில், இவ்வாறு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், பணி ஓய்வின்போது மொத்த நிதியில் உள்ள குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு, மீதத் தொகையை மாதந்தோறும் பென்சனாக பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு தேசிய பென்சன் திட்டம் தொடர்பான விதிமுறைகளை தற்போது   திருத்தி அமைத்துள்ளது. இந்நிலையில் ,தேசிய பென்சன் திட்ட கணக்கில் நிதி ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் மாற்றி,புதிய விதிமுறைகளையும்  அளித்துள்ளன. இதையடுத்து  தேசிய பென்சன் திட்ட கணக்குகள், Tier 1 மற்றும் Tier 2 என இரண்டு வகையான  பிரிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு தேசிய பென்சன் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் நிதியில், அதிகபட்சம்  50% வரை பங்குச் சந்தை முதலீட்டுக்கு ஒதுக்கிக்கொள்ளலாம் எனவும் பங்கு முதலீட்டில் எவ்வளவு விகிதம் முதலீடு செய்வது மற்றும் எவ்வளவு ரிஸ்க் எடுப்பது என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதுபோக மீத தொகையை அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துகொள்ளும் வசதி உள்ளது.

இந்நிலையில் தேசிய பென்சன் திட்ட கணக்கில், நிதி ஒதுக்கீட்டை இதுவரையில்  ஆண்டுக்கு 2 முறை வரை மாற்றிக்கொள்ளலாம். ஆகவே இந்த விதிமுறையானது  தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய விதிமுறைப்படி, இனி ஆண்டுக்கு 4 முறை, உங்கள் நிதி ஒதுகீட்டை மாற்ற முடியும். எனவே இது Tier 1 கணக்குகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் ஆனால் பென்சன் நிதி நிர்வாகியை (pension fund manager) ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மாற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |