இந்தியாவில் தேசிய பென்ஷன் திட்டம் மிகப் பிரபலமான பென்ஷன் திட்டமாகும். இதில் தற்போது வரை பலரும் இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் பல்வேறு விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 65 ஆண்டுகளாக இருந்த நிலையில் தற்போது 70 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விதிகளின்படி 18 முதல் 70 வயது வரையிலான அனைவரும் தேசிய பென்ஷன் திட்டத்தில் 18 முதல் 70 வயது வரையிலான அனைவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் 65 வயதிற்கு பிறகு தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைவதற்கு மூன்று ஆண்டுகள் lock-in காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் சேர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கை மூட முடியும்.
அதற்கான அதிகபட்ச வயது வரம்பு 75. அதுமட்டுமல்லாமல் 65 வயதிற்கு மேல் இணையும் முதலீட்டாளர்கள் தங்களது சொத்து ஒதுக்கீட்டை தேர்வு செய்து கொள்ள முடியும். ஆட்டோ சாய்ஸில் அதிகபட்சமாக 15 விழுக்காடும், ஆக்டிவ் சாய்ஸ் இல் அதிகபட்சம் 50 விழுக்காடும் எக் விட்டியில் ஒதுக்கிக் கொள்ளலாம். மேலும் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ஒதுக்கீட்டை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.