இந்தியாவில் கடந்து 2004 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு முதல் விரிவு படுத்தப்பட்ட தனியார் ஊழியர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என்று அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் மாற்றப்பட்டது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நுழைய அதிகப்பட்ச வயது 70 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 65 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது புதிய மாற்றமாக தேசிய ஓய்வூதிய ஆணையம் நேரடி பங்களிப்பு மற்றும் புதிய பென்ஷன் கணக்குகளுக்கான POPக்கு கமிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த முறையில் சந்தாதாரர்கள் தங்களின் PRAN எண்ணுடன் ஒரு ஸ்டாட்டிக் விர்ச்சுவல் ஐடியை இணைந்திருக்க வேண்டும் அதன் பிறகு, தங்களின் வங்கி கணக்கிலிருந்து பென்ஷன் கணக்கு வாலண்டியராக பங்களிக்கலாம். இந்த POP களை ஊக்குவிக்க ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு ஆணையம், தேசிய பென்ஷன் சேவை வழியாக கமிஷன் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதனை eNPS உடன் ஒப்பிடும் வகையில், தொடர்புள்ள சந்தாதாரர்கள் மேற்கொண்ட டி ரெமிட்டன்ஸ் பங்களிப்புகளில், அந்தந்த POP களுக்கான கமிஷன் 0.20% நன்கொடையாக இருக்க வேண்டும். மேலும் கணிசமான பங்களிப்புக்கும், உழைப்புக்கும் வெகுமதி கொடுக்கக்கூடிய வகையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பயனாளர்களுக்கு கமிஷன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.