தேசிய பென்சின் திட்டத்தின் கீழ் இரண்டாம் நிலை கணக்குகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு தடை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்கும் முறை ஆணையம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி பென்ஷன் கணக்கில் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் இதில் பயனாளிகளாக இருந்து வந்தன. அதன் பிறகு இந்த திட்டத்தில் தனியார் துறை ஊழியர்களும் முதலீடு செய்ய அரசு அனுமதி வழங்கியது.
இன்றைய சூழலில் அரசு ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் என அனைவரும் இந்த தேசிய பென்ஷன் திட்டம் மூலமாக பயன்பெற்று வருகின்றனர். இதில் இரண்டு வகையான கணக்குகள் உள்ளது. அதாவது முதல் நிலை கணக்கு, இரண்டாம் நிலை கணக்கு என இரண்டு வகை கணக்குகள் உள்ளது . தேசிய பென்ஷன் திட்டத்தின் பயனாளிகள் இரண்டாம் நிலை கணக்குகளுக்கு கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்துவதற்கு PFRDA தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.