Categories
மாநில செய்திகள்

தேசிய பென்ஷன் திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு… வெளியான புதிய விதிமுறைகள்….!!!!!!!!

தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பென்சன்  திட்டமாக வளர்ந்து வருகிறது. இந்திய அரசால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவை வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் சிறிது நாள் கழித்து அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்துகொள்ளலாம். தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க முடிகிறது.

மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் வட்டி தொகை, மெச்சூரிட்டி தொகை, மொத்த பென்ஷன் தொகை போன்றவற்றிற்கு வருமான வரி சட்டத்தின் கீழ் முழு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வது திட்டமிடுவதற்கு தேசிய ஓய்வூதிய திட்டம் சிறப்பானதுமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் மத்திய அரசு தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான விதிமுறைகளை தற்போது திருத்தி அமைத்து உள்ளது. தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் நிதி ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் மாற்றி புதிய விதிமுறைகளை வழங்கியுள்ளன. இதனையடுத்து தேசிய பென்ஷன் திட்ட கணக்குகள் Tier 1, மற்றும்Tier 2 என 2 வகையாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தேசிய பென்ஷன் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் நிதியில் அதிகபட்சம் 50% வரை பங்கு சந்தை முதலீட்டிற்கு ஒதுக்கிக்  கொள்ளலாம் என பங்குச் சந்தை முதலீட்டில் எவ்வளவு விகிதம் முதலீடு செய்வது என் மற்றும் எவ்வளவு ரிஸ்க் எடுப்பது என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் இது போக மீத தொகையை அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த நிலையில் தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் நிதி ஒதுக்கீட்டை இதுவரையில் ஆண் வருடத்திற்கு இரண்டு முறை மாற்றிக் கொள்ளலாம். இதனால் இந்த விதிமுறை ஆனது தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய விதிமுறைப்படி இனி ஆண்டிற்கு நான்கு முறை உங்கள் நிதி ஒதுக்கீட்டை மாற்றம் செய்ய முடியும். எனவே  Tier 1, கணக்குகளுக்கு மட்டும் பொருந்தும், எனவும் ஆனால் பென்ஷன் நிதி நிர்வாகியை வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மாற்றம் செய்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |