தேசிய மக்கள் நீதிமன்றம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் குழுவின் ஆணைப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் இளையான்குடியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்றது. இது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதியும், இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான எம்.சுனில் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் குழுவின் மூத்த உறுப்பினர் வக்கீல் கே.அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
இதில் 21 வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வில் பரிந்துரைக்கப்பட்டு வழக்காடப்பட்டது. இதில் 3 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. கொரோனா வழிமுறைகளின்படி அமர்வில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். இடையன்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் பணியாளர்களும், அலுவலர்களும் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.