Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது வென்ற இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் உள்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு ஆகிய பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை இயக்குனர் மணிகண்டன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi Kadaisi Vivasayi Working Stills | New Movie Posters

இயக்குனர் மணிகண்டன் ‘காக்கா முட்டை’ படத்திற்காக தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |