Categories
தேசிய செய்திகள்

தேசிய விலங்காக “பசுவை” அறிவியுங்கள்…. அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு கருத்து…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருடைய ஜாமின் மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜாமீன் அளிக்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து பேசிய நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறுகையில், பசு வதைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தை கடுமையாக இயற்ற வேண்டும். இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசு பாதுகாப்பு என்பது குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் சார்ந்தது கிடையாது. நாட்டு மக்கள் அனைவருக்குமே பசுமாடு பொதுவானது. மாடுகள் பாதுகாத்தால் நாடுகள் செழிக்கும் என்று கூறினார்.

Categories

Tech |