காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் நரேந்திர மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் உள்ள தேச விரோதிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி இருப்பதால் அவர்களுக்கு பஸ்மாசுரனாக இருக்கிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடவுள் நாராயணன் போன்று இருக்கிறார்.
மேலும் பிரதமர் மோடி ஊழலை பஸ்பம் செய்வதற்காக ஆட்சியில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு சித்த ராமையா போன்ற இந்துத்துவா, தேசியவாத தலைவர்கள் என்னை வகுப்புவாதி என்று கூறுகிறார்கள். ஆனால் தாவூத் இப்ராஹிம் போன்றவர்களை மதசார்பற்றவர்கள் என்று கூறுவார்கள். அது காங்கிரஸின் மனநிலை. தாவூத் இப்ராஹிம் மத சார்பற்றவராக இருப்பதால் அவருக்கு காங்கிரஸ் சான்று அளிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.