இந்தியத் தயாரிப்பான தேஜஸ்போா் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 நாடுகள் ஆா்வம்காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ்போா் விமானங்கள் ஒற்றை என்ஜினைக் கொண்டவை ஆகும். அதை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள வான்வெளிப் பகுதிகளிலும் ஈடுபடுத்த முடியும். இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ்போா் விமானங்களை ரூபாய்.48,000 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் சென்ற வருடம் பிப்ரவரியில் மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த நிலையில் தேஜஸ்போா் விமானம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத்துறை இணை அமைச்சா் அஜய்பட் எழுத்துபூா்வமாக பதில் அளித்தார். அதாவது, தேஜஸ் போா் விமானங்களை ஹிந்துஸ்தான் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய மலேசிய விமானப்படை விருப்பம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்த பரிந்துரையை மலேசியாவிடம் இருந்து ஹிந்துஸ்தான் நிறுவனம் பெற்றுள்ளது. ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளும் தேஜஸ்போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளாா்.
எதிரிநாடுகளின் ரேடாா்களால் கண்டுபிடிக்கப்பட முடியாத போா் விமானங்களைத் தயாரிக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது குறித்து எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு அமைச்சா் அஜய் பட் பதில் அளித்தார். அந்த பதிலில் “அத்தகைய தொழில் நுட்பத்தை டிஆா்டிஓ உள்நாட்டிலேயே உருவாக்கி இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரங்களைப் பொது வெளியில் வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்புடையதாக இருக்காது’ என குறிப்பிட்டாா். தேஜஸ்போா் விமானங்களை மலேசியா விரைவில் கொள்முதல் செய்ய இருப்பதாக ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் ஆா்.மாதவன் சென்ற மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.