போலீசார் சுற்றி வளைத்தால் குற்றவாளி ஒருவன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெகுன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவன் ரோப் சந்த் என்ற சுக்லா. இவன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை கொள்ளை போன்ற பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதனால் இவன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக காவல்துறையினர் அறிவித்திருந்தனர். மேலும் சுக்லா போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் போலீசாருக்கு கடும் சவாலாக இருந்த சுக்லாவை பற்றிய தகவல் கொடுப்போருக்கு 5 ஆயிரம் பரிசு தொகை அளிக்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து சுக்லா ஜெய்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் சுக்லாவை சுற்றிவளைத்தனர். சுக்லா உடனிருந்த சக கூட்டாளிகள் தப்பி ஓடிய நிலையில் சுக்லா மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டான். இதனால் செய்வதறியாது திகைத்த சுக்லா தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். பின்னர் போலீசார் குற்றவாளி சுக்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.