கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் தனக்கு ஆலோசனை வழங்கிய சென்னை ஊழியரை தேடி வந்த நிலையில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி நடைபெற்ற போது, சென்னை நட்சத்திர விடுதி தாஜ் கோரமண்டல் நிறுவன ஊழியர் ஒருவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார். அந்த அறிவுரை சச்சினுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த ஊழியர் யார் என்று சச்சினுக்கு தெரியவில்லை. அவர் பெயர் கூட சச்சினுக்கு தெரியாது. ஆனால் அவரை சந்திக்க டெண்டுல்கர் விருப்ப படுகிறார். அந்த ஊழியரை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு நெட்டிசன்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த பதிவினை கண்ட நபர் ஒருவர் சச்சின் டெண்டுல்கருக்கு அறிவுரைகளை கூறியவர் எனது உறவினர் என்றும் அவருக்கு சச்சின் அளித்த ஆட்டோகிராப் தன்னிடம் இருப்பதாக டீவிட்டரில் பதிவிட்டிருந்தார். விசாரணையில், அவர் சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள பெரியார் நகர் என்ற பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பது தெரியவந்துள்ளது.