கோவை பாஜக எம்எல்ஏ வாக இருக்கும் வானதி சீனிவாசன் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக உள்ளார். அவருக்கு மேலும் ஒரு முக்கிய பதவி கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் அதி முக்கிய முடிவுகளை எடுப்பது கட்சியின் உயர்மட்டக் குழுவான மத்திய பார்லிமென்டரி குழு. பிரதமர் மோடி, துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே பாஜகா சீனியர் தலைவர்கள். இந்த குழுவில் மேலும் ஒருவரை அதாவது குறிப்பாக ஒரு பெண்மணியை சிறப்பு விருந்தினராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பதவி வானதி சீனிவாசன் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் வானதி சீனிவாசன் வடமாநிலங்களுக்கு டூர் செல்வார் என சொல்லப்படுகிறது. இதனால் அவர் மகிழ்ச்சியில் உள்ளாராம்.