Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. அரைகுறை ஆடையுடன் சாலையோரம் நின்ற இளம்பெண்….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது சாலையோரம் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை உறவினர்கள் மீட்டு விசாரித்தனர். அப்போது ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு ஆட்டோ ஓட்டுனரான வரதராஜ்(22) என்பவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 7 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இதனை அடுத்து போலீசார் வரதராஜனை கைது செய்தனர்.

Categories

Tech |