Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தேடி வந்த பல கோடி ரூபாய்”…. ரசிகர்களுக்காக “நோ” சொன்ன யாஷ்…. ராக்கிபாய் ராக்கிபாய்தான்…!!!!

நடிகர் யாஷ் பான்மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என கூறி தனக்கு வந்த பல கோடிகளை திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார்.

பான் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகரானார் யாஷ். இதையடுத்து அண்மையில் வெளியான கேஜிஎஃப்2 திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது ரிலீஸாகி 1000 கோடி வசூல் செய்திருகின்றது. ரசிகர்கள் யாஷின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள். இதனால் இவரைத் தேடி விளம்பரங்கள் அதிகம் வருகின்றது. இந்நிலையில் இவரை தேடி பான் மசாலா பிராண்ட் விளம்பரம் ஒன்று வந்திருக்கின்றது. அதில் நடிப்பதற்கு பல கோடி தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் யாஷ் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறாராம்.

பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் பான்மசாலா விளம்பரங்களில் நடித்து பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் யாஷ் மக்களின் உடல்நிலை பாதிக்கபடும் பான்மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கின்றார். விளம்பரத்தில் நடித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். ஆகையால் ரசிகர்களுக்கு அவர் பரிந்துரை செய்ய விரும்பவில்லை என கூறப்படுகின்றது. இதனால் யாஷ் தனக்கு வந்த பல கோடியை திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார்.

Categories

Tech |