பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவரின் வயது 80. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புது கட்சி தொடங்கிய அமரீந்த சிங் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இருப்பினும் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில் பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தனது கட்சியே பாஜகவுடன் இணைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லிக்கு அடுத்த வாரம் செல்லும் அவர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அந்த கட்சியில் சேர உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.