Categories
மாநில செய்திகள்

தேநீர் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி… தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் தேநீர் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் இணைந்து ஆலோசனை செய்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் பார்சல் மட்டும் வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. காலை முதல் இரவு வரை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்த கூடாது என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |