Categories
தேசிய செய்திகள்

தேநீர் விற்ற மோடி இன்று பிரதமராகியுள்ளார் – ட்ரம்ப் புகழாரம் …!!

தேநீர் விற்ற மோடி இன்று பிரதமராகியுள்ளார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் தனி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் இன்று காலை அகமதாபாத் விமான நிலையம்  வந்திறங்கினார். இந்தியாவின் பாரம்பரிய நடனம் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்தை கண்டு ரசித்தார்.

அதைத்தொடர்ந்து உலகிலே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் மொடீரா மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த ட்ரம்ப்புக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

அதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் அமைக்கப்பட்ட குண்டு துளைக்காத மேடையில் ஏறிய அதிபர் ட்ரம்ப், மெலனியா, பிரதமர் மோடி ஆகியோருக்கு அங்கிருந்தவர்கள் வரவேற்று முழக்கம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து இரு நாட்டு தேசிய கீதங்களும் அங்கு ஒலிக்கப்பட்டடு  நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது.

இதில் பேசிய ட்ரம்ப் , இந்தியர்களின் ஒற்றுமை உலக நாடுகளுக்கு ஒரு உதாரணம்.இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு. தேநீர் விற்ற மோடி, பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ளார், அவரை எல்லாரும் நேசிக்கிறார்கள். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர் .

கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. டைகர் டிரயல்’ என்ற பெயரில், இரு நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி நடைபெறும்.ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கப்பல் கட்டுவதில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு. தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்தியா நல்ல தலைமையை கொண்டுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வருகிறேன்.

இந்திய படைகளுக்கு ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை வழங்க தயார். விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயல்படும்.வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகத்தை மதிக்கும் நாடு இந்தியா. இந்தியா எங்களது இதயத்தில் இடம் பிடித்த நாடு. வறுமையில் இருந்து பல கோடி இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் பேசினார்.

 

Categories

Tech |