தேனியில் ரவீந்திரநாத் எம்.பி காரின் மீது கல்லை வீசி தாக்குதலை நடத்திய 17 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அனைத்து மாவட்டத்திலிருக்கும் பொதுமக்கள் அவரவர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் மிகவும் ஆர்வமுடன் சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ரவீந்திரநாத் எம்.பி பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்திலிருந்த வாக்குச் சாவடியை ஆய்வு செய்ய சென்றார்.
அப்போது அங்கு அவரது காரின் மீது சில நபர்கள் கல்லை கொண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ரவீந்திரநாத் எம்.பியின் கார் ஓட்டுநர் போடியிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் அக்கிராமத்தில் வசிக்கும் பெரியபாண்டி, விஜயன் உட்பட 17 பேரை கைது செய்துள்ளனர்.