Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் ஓ.பி.எஸ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் ….!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் விடுதலை கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமூகத்தினரின் பெயரை தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டிய பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஹான்ஸ் ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டு தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் தேவேந்திரகுல வேளாளர் என மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடமால் தாமதப்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-யின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |