Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனியில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்தவர்கள்”…. தகவல் வெளியிட்ட மேலாளர்….!!!!!!!

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்தவர்களின் விவரம் குறித்து மேலாளர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சென்ற 2008 ஆம் வருடம் முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி தேனியிலும் தொடங்கப்பட்டது. பின்னர் மக்களின் தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தேனியில் சேவை தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 2 லட்சம் 76 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன்பெற்றுள்ளார்கள்.

ஆம்புலன்ஸ் தேவையானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பிரசவ தேவை அவசர தேவை என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்கின்றார்கள். இது பிரசவத்துக்காக அழைக்கப்பட்டவர்களில் 294 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ் சென்று பிரசவம் பார்க்கப்பட்டிருக்கின்றது. மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 245 கர்ப்பிணிகளுக்கு அவர்களின் வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு பின் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். இத்தகவலை தேனி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலான பிரகாஷ் கூறியுள்ளார்.

Categories

Tech |