Categories
தேசிய செய்திகள்

தேனில் கலப்படம்…. சிக்கிய முன்னணி நிறுவனங்கள் – மக்களுக்கு அதிர்ச்சி…!!

பிரபல முன்னணி நிறுவனங்களின் தேனில் கலப்படம் உள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் தெரிவித்துள்ளது. 

ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேனில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய NMR சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை தேனை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதில் முன்னணி நிறுவனங்களான டாபர், பதஞ்சலி, ஜண்டு, பைத்யநாத் உள்ளிட்ட 13 பிராண்டுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, இதில் உள்ள 10 நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் கலப்படமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சக்கரைப்பாகு கலந்திருப்பதாக CSI யின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சு குழுவின் திட்ட இயக்குனர் அமித் குரானா தெரிவித்துள்ளார். மேலும் சபோலா, மார்க்பெட் சோனா, சொசைட்டி நேச்சுரல் ஆகிய 3 நிறுவனங்களின் தேனில் கலப்படம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தேன் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடிய ஒரு பொருள்.

தற்போது கொரோனா தொற்று நோய் பரவி வரும் நிலையில், அதை எதிர்த்துப் போராடும் குணம் தேனுக்கு இருப்பதாக நம்பப்பட்டு வருகிறது. இத்தகைய குணம் கொண்ட தேனில் சர்க்கரை பாகு சேர்த்தால் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அசல் தேன் என்று கூறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களில் கலப்படம் உள்ளது என்ற தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |