Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி அரசு மருத்துவமனை…. கொரோனா வார்டில் திடீர் ஆய்வு…. பாதுகாப்பு உடையை அணிந்து சென்ற கலெக்டர்….!!

தேனி மாவட்டத்தினுடைய கலெக்டர் பாதுகாப்பிற்கான கவச உடையை அணிந்து திடீரென்று கொரோனா வார்டில் ஆய்வை மேற்கொண்டார்.

தேனியிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு மாவட்டத்தினுடைய கலெக்டரான கிருஷ்ணனுண்ணி சென்றார். அப்போது அங்கு கொரோனாவிற்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் தடுப்பு பணிகளை கேட்டறிந்தார். அதன்பின் கலெக்டர் பாதுகாப்பிற்கான முழு கவச உடையை அணிந்துகொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று கொண்டு வரும் வார்டிற்குள் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் அவர் படுக்கை வசதி நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் சிகிச்சை பெறுவோரிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து கலெக்டர் மருத்துவமனையின் சில முக்கிய இடங்களையும் ஆய்வு செய்தார்.

Categories

Tech |