Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்திற்கு இன்று (16.4.22) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 16ம் தேதி(இன்று) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனவே ஏப்ரல் 16-ஆம் தேதி (இன்று) தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை ஆகும். மேலும் இந்த விடுமுறை ஈடு செய்யும் வகையில் மே 7-ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |