Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் அதிகாரிகள் உட்பட 283 பேருக்கு கொரோனா..!!

தேனி மாவட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் உட்பட 283 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதியாகியுள்ளது.

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அதிக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 823 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4337 ஆக உயர்ந்துள்ளது. இதில், தேனி டாஸ்மாக் அலுவலக துணை வட்டாட்சியர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர், ராசிங்காபுரத்தை சேர்ந்த பெண் மருத்துவர், டி.சிந்தலைச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையை ஆய்வக தொழில் நுட்புநர், கோம்பையைச் சேர்ந்த ராணுவ வீரர், கோம்பை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர், கூடலூர் வடக்கு காவல்நிலைய பெண் காவலர் போன்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அல்லிநகரம் நகராட்சி சார்ந்த 84 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தேனி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. தேனியில் தற்போது வரை 2 ஆயிரத்து 255 பேர் குணமாகியுள்ளனர். 2ஆயிரத்து 31 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |