Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேனீர் அருந்த சென்ற சாக்கு வியாபாரி…. அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாக்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாதுளம்பேட்டை பகுதியில் சாக்கு வியாபாரியான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியரான இந்துமதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வினோத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வினோத் கும்பகோணம் எஸ். பி. எஸ். சாலையில் அமைந்துள்ள ஒரு தேநீர் கடையில் நின்று  தேநீர் குடித்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக  வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வினோத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வினோத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து  மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்துமதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வினோத்தை வெட்டியவர் யார்? என்ன காரணம் என்ற  பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |