தேன்கனிக்கோட்டையில் ரத்ததான முகமானது நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையில் இருக்கும் கெலமங்கலம் அரசு வட்டார ஆரம்பி சுகாதார நிலையத்தின் சார்பாக ரத்ததான முகமானது சௌடேஸ்வரி மஹாலில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் பேரூராட்சி தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மனோகரன், தாசில்தார் குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள்.
இதையடுத்து அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயன், கெலமங்கலம் பள்ளி சீரார் நல மருத்துவர்கள் மணிகண்டன், சங்கீதா, அன்புச் செல்வன், செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றார்கள். இதை தொடர்ந்து தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்தார்கள்.