Categories
மாநில செய்திகள்

தேமுதிகவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்த அதிமுக…. இழுபறி முடிவுக்கு வருமா…?

அதிமுகவில் தேமுதிக இணைவது குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று அதற்கான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது எந்தெந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளது என்ற தொடர்பான அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.  முன்னதாக அதிமுகவில் பாமக கட்சியினர் இணைந்து அவர்களுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிமுகவில் தேமுதிக இணைவது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. இதில் பாமக போன்றே தேமுதிகவும் 23 தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுக 12 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். இதையடுத்து பாமகவுக்கு அளித்த எண்ணிக்கைக்கு நிகரான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கெடுபிடி காட்டுவதாகவும், இல்லை என்றால் அமமுக, கமல், சரத்குமார் உள்ளிட்ட ஏதாவது கட்சியுடன் இணைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேமுதிக கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்தின் மகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தேமுதிக கூட்டணி தொடருமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷை, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி இருப்பதாகவும், பேச்சுவார்த்தை குறித்த நேரத்தை நீங்களே முடிவு செய்து கூறுமாறு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து தொகுதி பங்கீடு குறித்த இழுபறி இன்று முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |