சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனாவை ஒழிக்க மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டு வறுமை ஒழிந்திட சுதந்திரதினம் வழிவகுக்கட்டும் என்றும் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Categories