தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 69வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் என அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேமுதிக நிறுவனரும் , தமிழக மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்த நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்