நடிகை சினேகா தேம்பி தேம்பி அழுது தனது இருக்கையிலிருந்து எழுந்து செல்வது போல தனியார் காட்சிகள் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் யாரை காணச் செல்கிறார் என்பது சஸ்பென்ஸ். ஜீ தமிழ் டிவியில் ஆஸ்தான நடுவர்களில் ஒருவரான சினேகா தற்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். குறிப்பிட்ட நிகழ்ச்சி கிராண்ட் பினாலே இன்று ஒளிபரப்பாக உள்ளது.
இது தொடர்பாக வெளியான ஒரு ப்ரோமோ வீடியோவில் நடிகை சினேகா யாரோ ஒருவரை பார்த்து திடீரென்று கதறி அழத் தொடங்குகிறார். அதன்பிறகு தனது இருக்கையில் இருந்து எழுந்து அழுதுகொண்டே நடந்து செல்கிறார். ஆனால் அவர் ஏன் அழுகிறார்? யாரைப் பார்த்து அழைக்கிறார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.