Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை பறிக்க சென்ற பெண்…. கொடூரமாக தாக்கிய காட்டெருமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வனவிலங்கு தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே அம்மனட்டி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நரிக்குழி ஆடா பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் தேயிலை கொண்டிருந்தனர். அப்போது நடராஜன் ஜெயலட்சுமியை மருந்து தெளிக்கும் எந்திரத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் நடராஜன் சந்தேகமடைந்து ஜெயலட்சுமியை தேடிச் சென்றுள்ளார். அப்போது ஜெயலட்சுமி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் ஜெயலட்சுமியிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளார்.

அதற்கு ஜெயலட்சுமி வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை தாக்கியதாக கூறியுள்ளார். இதனையடுத்து நடராஜன் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஜெயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் ஜெயலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பின் ஜெயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டெருமைகளின் நடமாட்டம் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து உயிரிழந்த ஜெயலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூபாய் 50 ஆயிரம் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |